Tuesday 20 January 2015







1) TV’யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே super glue போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.



2) சமீப காலமாக அவள் reload செய்ய வீட்டில் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்றுதான் அர்த்தம்.



3) ஒழுங்காய் news papers மட்டுமே படித்துக் கொண்டு இருந்தவள் மித்திரன் படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.



4) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் phone இருக்கும். அவளது எல்லா incoming calls'க்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் call'க்கு மட்டும் vibrating மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த call வந்தவுடன் “சொல்லுடி” என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று…



5) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா, மனசும் மனசும் பேசும் போது வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)



6) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இழிச்சவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் “சொல்லுடி” என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் “சொல்லு ஹப்ஸா, அப்புறம் ஹப்ஸா” என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.



7) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், “இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா" என்று சொல்வாள். எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை off செய்து விடுவீர்களா?



8) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. அங்கொடையில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவளையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.



9) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.


10) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்.. அப்புறம்… என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள “பல்ப்” எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு… அப்புறம்தான் பதில் வரும்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!