Tuesday 12 April 2016


Opportunity for NRIs to vote (INDIA)

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்குரிமை செலுத்த ஒரு வாய்ப்பு வரப்போகிறது, அனைவரும் இந்த இனைய வழு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் .

வெளிநாட்டில் வசிக்கிற இந்திய வாக்காளர் பெயரைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இதனை பூர்த்தி செய்வது மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் உரிமை நடைமுறைக்கு வரும் போது பணிகள் எளிதாகும்.


http://www.nvsp.in/forms/form6a.html

http://www.nvsp.in/forms/




Tuesday 5 April 2016









புதுடெல்லி:


ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இலவசமாக டிவி சேனல்களை கண்டுகளிக்க புதிய சேவையை தூர்தர்ஷன் அறிமுகப்படுத்துகிறது. டி.டி.டி. (Digital Terrestrial Television services) என அழைக்கப்படும் இந்த வசதி டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்பூர், இந்தூர், அவுராங்காபாத், போபால், பெங்களூர், அகமதாபாத் ஆகிய 16 நகரங்களில் கடந்த பிப்ரவரி 25-ந்தேதி ஆரம்பிக்கப்பட்டது. 


ஓ.டி.ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லட் கருவிகளில் டிஜிட்டல் வீடியோ பிராட்காஸ்டிங் செய்யும் DVB-T2 டாங்கிள் அல்லது வை-பை டாங்கிள்களை பொருத்தி டிவி சேனல்களை கண்டு ரசிக்கலாம். இந்த டாங்கிள்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களிலும் கிடைக்கின்றன. இதற்கென பிரத்யேக ஆப்ஸ்களை ஸ்மார்ட்போனில் நிறுவினால் டி.டி சேனல்களின் சிக்னலை பெற்று டிவி சேனல்களை காணலாம். 

டாங்கிள் வாங்குவதற்கு மட்டும் செலவு செய்தால் போதுமானது. இதற்கு இண்டர்நெட் எதுவும் தேவையில்லை. தற்போது, டி.டி. நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் சேனல்களை இலவசமாக பார்த்து ரசிக்க முடியும்.

Sunday 3 April 2016










பழைய கருப்பு வெள்ளை படத்துக்கு பதில் புதிய படத்துடன் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். பழைய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்றால், வாக்காளர் சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டு போன்ற அடையாள அட்டை வாங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மையங்களில், பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையே விநியோகம் செய்யப்படுவதாக சிலர் புகார் கூறினர்.


இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது: தற்போதுள்ள வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில் புதிய வண்ண கார்டு வேண்டும் என்றால் ரூ.25 கட்டினால் 10 நாளில் புதிய கார்டு கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள  வாக்காளர் அட்டையில் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு பதில் புதிதாக கலர் படம் மாற்றி தர வேண்டும் என்றால், முதலில் வாக்காளர் சேவை மையத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் ஆன்லைன் விண்ணப்பத்தில் தற்போதுள்ள கலர் படத்தை இணைக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 15 நாளில், உங்கள் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்று, செல்போனில் எஸ்எம்எஸ் வரும். அதன்பிறகு வாக்காளர் சேவை மையத்தில் ₹25 கட்டணம் செலுத்தினால், 10 நாளில் புதிய வண்ண அடையாள அட்டை கிடைக்கும் என்றார்.
Subscribe to RSS Feed Follow me on Twitter!