Sunday 22 February 2015










மெல்போர்ன், பிப். 20-

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அடுத்து நாளை மறுநாள் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில் இன்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்ஸ்அப்பில் ஒரு வதந்தி வலம் வருகிறது.







அந்த வாட்ஸ்அப் வதந்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது, வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து துல்லியமான முடிவை அது வெளியிட்டு உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றும்.

காலிறுதியில் வெற்றி பெறும் இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும். இதுமட்டும் அல்லாமல், அனைத்து போட்டிகளின் முடிவுகளும் இதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு இது மிகப்பேரிய சோதனையாகும்.

இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்து அதில் கூறப்பட்டிருக்கும் 9 தகவல்களும் உண்மையாகவே நடந்து உள்ளது. மேலும் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அதில் கணித்து கூறபட்டு உள்ளது.

இதனால் இந்த கருத்து கணிப்பு போல் போட்டி முடிவு அமைந்தால் ஐ.சி.சி.க்கு பெரிய தலைவலி ஏற்படும்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!