Sunday 22 February 2015





உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் ஏழே நாட்களில் உடல் எடையை சுமார் 5 கிலோ வரை குறைப்பதற்காக ஆரோக்கியமான வழிமுறை.

இந்த டயட்டை பின்பற்றும் ஏழு நாட்களும் தினமும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

நாள் 1 : டயட்டின் முதல்நாள் முழுவதும் வாழை பழம் தவிர்த்து மற்ற பழ வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். தர்பூசணி அதிகமாக சாப்பிடுவது நல்லது. பழச்சாறு கூடாது அப்படியே சாப்பிடவேண்டும்.

நாள் 2 : டயட்டின் இரண்டாம் நாளில் காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும், சமைத்தோ சமைக்காமலோ உங்கள் விருப்பம் போல சாப்பிடலாம், சமைக்கும்போது தேங்காயோ அல்லது எண்ணெயோ கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. காலை உணவுக்கு பெரிய உருளைக்கிழங்கு ஒன்றை சாப்பிட வேண்டும்.

நாள் 3 : டயட்டின் மூன்றாம் நாளில் காய்கறிகள் பழங்கள் சமமாக சாப்பிட வேண்டும், உருளைகிழங்கோ வாழை பழமோ சாப்பிட கூடாது, பழரசம் கூடாது,

நாள் 4. டயட்டின் நான்காம் நாளுக்கு 8 வாழை பழங்கள் 3 குவளை பால், தேவையெனில் காய்கறி சூப் குடிக்கலாம். சூப்பில் கண்டிப்பாக எண்ணெய் சேர்க்கக்கூடாது.

நாள் 5: டயட்டின் ஐந்தாம் நாளில் 6 முழு தக்காளி சாப்பிட வேண்டும், மதிய உணவிற்கு ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம். இன்றைய முழு நாளில் குறைந்தது 12 குவளை தண்ணீராவது குடிக்க வேண்டும் அதிகம் குடித்தால் இன்னும் நல்லது.

நாள் 6: டயட்டின் ஆறாம் நாளில் காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும், சமைத்தோ சமைக்காமலோ உங்கள் விருப்பம் போல சாப்பிடலாம், சமைக்கும்போது தேங்காயோ அல்லது எண்ணெயோ கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. ஒரு குவளை அரிசி சாதம் சாப்பிடலாம்.

நாள் 7: டயட்டின் ஏழாம் நாளில் 6 ஆம் நாளின் டயட்டை போன்று அப்படியே பின்பற்ற வேண்டும், மேலும் எல்லா வகையான பழச்சாருகளையும் இனிப்பி இல்லாமல் குடிக்கலாம்.

நம் அன்றாட பழக்க வழக்கங்களில் எதையுமே மாற்றாமல் இந்த டயட்டை அப்படியே பின்பற்றும் போது 4-5 எடை கண்டிப்பாக குறையும். மேலும் இந்த டயட்டோடு தினமும் அரைமணிநேரம் நடைபயிற்சி செய்தால் குறைந்தது 6 கிலோ வரை எடையை குறைக்கலாம்.

மூன்றாம் நாளிலிருந்து உடல் அசதி அதிகமாக இருக்கும், 6 ஆம் நாளிலிருந்து உடல் சுறுசுறுப்பு திரும்ப கிடைத்துவிடும்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!