Sunday 3 April 2016










பழைய கருப்பு வெள்ளை படத்துக்கு பதில் புதிய படத்துடன் வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். பழைய வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்றால், வாக்காளர் சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதிய ஸ்மார்ட் கார்டு போன்ற அடையாள அட்டை வாங்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மையங்களில், பழைய கருப்பு வெள்ளை புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையே விநியோகம் செய்யப்படுவதாக சிலர் புகார் கூறினர்.


இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று கூறியதாவது: தற்போதுள்ள வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில் புதிய வண்ண கார்டு வேண்டும் என்றால் ரூ.25 கட்டினால் 10 நாளில் புதிய கார்டு கிடைக்கும். ஆனால், தற்போதுள்ள  வாக்காளர் அட்டையில் உள்ள கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு பதில் புதிதாக கலர் படம் மாற்றி தர வேண்டும் என்றால், முதலில் வாக்காளர் சேவை மையத்தில் சம்பந்தப்பட்ட வாக்காளர் ஆன்லைன் விண்ணப்பத்தில் தற்போதுள்ள கலர் படத்தை இணைக்க வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. 15 நாளில், உங்கள் புகைப்படம் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்று, செல்போனில் எஸ்எம்எஸ் வரும். அதன்பிறகு வாக்காளர் சேவை மையத்தில் ₹25 கட்டணம் செலுத்தினால், 10 நாளில் புதிய வண்ண அடையாள அட்டை கிடைக்கும் என்றார்.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!