Thursday, 12 February 2015







1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.முகவரி:The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in







2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?* SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.*https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*







3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.







4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும். பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும். ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.






5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,* இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம். முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.




Monday, 9 February 2015








வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும். 

முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள். 

இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது., பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகோடா போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை. 

எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும். எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும். 

அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும். தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், ஒரு வாரதத்தில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும். 

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும்.

Thursday, 5 February 2015




வழக்கம் போல் உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹூரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு வெளியிட்டு உள்ளது. 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது. பல வருடமாக 3 வது இடத்தில் இருந்த ரஷ்யாவை, இந்தியா இந்த வருடம் 4-ஆம் இடத்திற்கு தள்ளி முதல் முறையாக டாப் 3 இடத்திற்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடீசுவரர்கள் அமெரிக்கா மற்றும் சீனாவில் தான் உள்ளனர் என இந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.











இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் இந்த வருடமும் முகேஷ் அம்பானி 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் உலகளவில் இவர் 41-வது இடத்தில் உள்ளார்.

ரஷ்யாவின் பொருளாதார நிலை மற்றும் அரசியல் நிலையில் சற்று மந்தமாக இருப்பதால் 2014-ஆம் ஆண்டில் இந்நாட்டின் வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவின் கோடீசுவரர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் 93 ஆக உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 365 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது.

ஹூரன் குளோபல் ரிச் லீஸ்ட் 2015 இந்த அறிக்கையில் 68 நாடுகளின் 2,089 கோடீசுவரர்களின் பற்றிய தகவல்களை வெலியிட்டு உள்ளனர்.. 649 பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது, 869 பேரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது, 230 பேர் சொத்து மதிப்பில் மாற்றம் இல்லை, 341 புது முகங்கள் மேலும் 95 பேர் இந்த வரிசையில் இருந்து வெளியேறினார்கள்.

மேலும் இப்பட்டியலில் டாப் 3 கோடீசுவரர்களாக பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம், வாரன் பாபெட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 244 பில்லியன் டாலர்.



Monday, 2 February 2015








சமையல் கியாஸ் நேரடி மானியம் திட்டம் ஜனவரி 1–ந்தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டரை பெற வேண்டும். மானியம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதாலும் கூடுதலாக இணைப்புகள் வைத்து சிலிண்டர்களை அதிக விலைக்கு விற்பதும் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கியாஸ் ஏஜென்சிகளே பல்வேறு தவறுகளுக்கு காரணமாக இருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது ‘‘கிடுக்கிப்பிடி’’ போட்டுள்ளது.

ஆனாலும் கியாஸ் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இன்னும் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும் போது முன்பெல்லாம் ரூ. 10, 20 கொடுத்தால் வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறு ரூ. 50 கொடுத்தால் தான் சிலிண்டர் வழங்குவோம் என்று வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.

மேலும் தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூ. 30–ம் அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூ. 50–ம் கட்டாயம் தர வேண்டும் என்று ஊழியர்கள் பிடிவாதம் செய்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை லட்சக்கணக்கான பேர் வாடகை வீடுகளிலும், அடுக்குமாடிகளிலும் குடியிருக்கிறார்கள்.

அவர்களிடம் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்கள் கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். ரூ. 30–க்கும் மேல் கொடுத்தால் மட்டுமே சிலிண்டரை வழங்குகிறார்கள். இல்லையென்றால் வாக்குவாதம் செய்து விட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப பெற்று செல்கின்றனர்.

இனாமாக ரூ.5, 10 கொடுத்தால் அதை ஏற்பது இல்லை. ரூ. 50 தான் வேண்டும் என்று தகராறு செய்து வாங்கி செல்கின்றனர். அவர்கள் கேட்ட தொகையை தரவில்லை என்றால் தெரு முழுவதும் திட்டிக் கொண்டே செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சென்னையில் சிலிண்டர் வழங்கும் பையன்களின் அடாவடித்தனம் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களை மிரட்டுவதும், கேவலமாக பேசுவதும் தொடர்ந்து நடக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே புகார் தெரிவிக்கின்றனர்.

பலர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு அமைதியாக இருப்பதால் டெலிவரி பையன்கள் வசூல் வேட்டை தீவிரமாகி வருகிறது.

பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், மூலக்கடை, அயனாவரம், வண்ணாரப்பேட்டை, மணலி, அடையாறு, வியாசர்பாடி பல பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதித்துள்ளனர்.



இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறியதாவது:–










கியாஸ் விநியோகம் செய்யும் பையன்களுக்கு ‘டிப்ஸ்’ எதுவும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் சம்பளம் வழங்குகிறார்கள். வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால் ரூ. 30, 40, 50 என நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. அதனை அனுமதிக்க கூடாது.

கட்டாயப்படுத்தி பணம் கேட்டால் கியாஸ் ஏஜென்சியின் பெயர், ஏரியா, விவரங்களை போன் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவரும் தங்களது பெயர் விவரங்களை கூற வேண்டும். அப்போது தான் தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் தேனாம்பேட்டையில் இதற்காக சேவை மையம் செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும நேரத்தில் பொது மக்கள் நேரிலும் வந்து எழுத்து மூலம் புகார் கொடுக்கலாம்.

இது தவிர 11800 425247247 என்ற இலவச டெலிபோன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் அந்த கியாஸ் ஏஜென்சி மீதும் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொது மக்கள் சிலிண்டர் விநியோகத்தின் போது கூடுதலாக பணம் கேட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நேரடி மானியம் பெறுவதற்காக பொது மக்கள் தங்களின் கியாஸ் பெயர், முகவரி போன்றவற்றை மாற்ற விரும்புவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுகிறது. வாடிக்கையாளர்களின் சூழ்நிலைக் கருதி அவர்களிடம் ரூ. 2000 முதல் ரூ. 3500 வரை ஏஜென்சிகள் வசூலிக்கின்றன.

கியாஸ் புத்தகத்தில் உள்ள தவறுகளை சரி செய்து கொடுப்பதாக கூறி பல ஆயிரங்களை பறிக்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் கண்காணிக்க வேண்டும்.

பெயர் மாற்றம், செய்வதற்கு என்ன வழி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கலாம்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது போல கியாஸ் ஏஜென்சிகள் செயல்படுகின்றன என்று வாடிக்கையாளர்கள் மனம் குமுறுகின்றனர்.





Saturday, 31 January 2015




தற்கால இளைஞர்களின் தகவல் பரிமாற்றத்திற்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது குறுஞ்செய்தி எனப்படும் SMS-Short Messaging Service. 
இளைஞர்கள் மட்டுமல்லாமல் தொழில் முனைவோர், விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோர் மற்றும் பலருக்கு குறுஞ்செய்தியின் உதவி மிகப்பெரும் தேவையாகவே உள்ளது. இத்தகைய குறுஞ்செய்தியை இணைய தளம் வாயிலாக அனுப்பும் முறை தற்பொழுது பிரபலமாகி வருகிறது.


சமீபத்திய கணக்கெடுப்பில் இந்திய மக்கள் தொகை சுமார் 1.22 நிகற்ப்புதம்(billion), இதில் 929 பத்து நூறாயிரம்(million) சதவிகிதத்தினர் அலைபேசி வாடிக்கையாளர்களாக உள்ளனர். ஆகவே ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள குறுஞ்செய்தியின் பங்கு மிகப்பெருமளவில் கண்டிப்பாக இருக்கும்.

இத்தகைய குறுஞ்செய்தியை அனுப்புவதற்கு பல இணையதளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு way2sms, fullonsms, site2sms, youmint, ultoo, என்று பல்வேறு வகையான இணையத்தளங்கள் இருக்கின்றன.
இதில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது?

முக்கிய சிறப்பம்சம் என்று சொல்லப்போனால் இணையதளத்தின் மூலம் அனுப்பும் குறுஞ்செய்திக்கு எந்த வித கட்டணமும் வசூலிப்பதில்லை. ஆகையால் இணையதளம் அதிகம் உபயோகிப்பவர்கள் கட்டண குறைப்பானை (sms rate cutter) பயன்படுத்துவது சற்று குறைந்துள்ளது.

அலைபேசி நிறுவனங்களின் கட்டண விவரங்கள்:
ஏர்செல்-35 ரூபாய் செலுத்தினால் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதிலும் நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்திக்கு மேல் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படும். இதன் கால அவகாசம் ஒரு மாதம் ஆகும். இதே போலவே மற்ற நிறுவனங்களும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
டாடா டோகோமோ 38 ரூபாய்க்கு 45 நாள் கால அவகாசம் தருகிறது.

வோடபோன் 27 ரூபாய்க்கு 100 உள்ளூர் மற்றும் வெளியூர் குறுஞ்செய்திகள் அனுப்பலாம். 15 நாள் கால அவகாசம் தருகிறார்கள்.
இவ்வளவு செலவு செய்து அனுப்புவதை விட இணையதளம் வாயிலாக எந்தவித கட்டணமுமின்றி அனுப்பத்தானே எல்லோரும் விரும்புவர்.
மற்றொரு முக்கிய காரணமாக விளங்குவது இதன் எண்ணிக்கை இல்லா குறுஞ்செய்தி அனுப்பும் வசதி. இவ்வசதி மூலம் நாம் பல பேருக்கு குறுஞ்செய்தியை பகிர்ந்து கொள்ளலாம். விற்பனைத்திட்டம் கொண்டுள்ளோருக்கு இதன் தேவை அதிகம் இருக்கும்.

Smsintegra.com என்ற இணையத்தளத்தின் மூலமாக நாம் ஒரு சொடுக்கில் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். மற்ற இணையதளத்தில் Group Message எனப்படும் வசதி கிடையாது. ஆனால் இவ்வசதியை பெறுவதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் இவ்வசதி மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.

இணைய தளக் குறுஞ்செய்தியை கணினி வைத்திருப்பவர்கள் மட்டும் தான் அனுப்ப முடியும் என்பதில்லை, தற்போதைய புதுரக கைபேசியின் வாயிலாகவும் நாம் இவ்வசதியை பெறமுடியும்.
இதற்கென பல Application கள் உள்ளன. உதாரணத்திற்கு (Free sms India) என்ற android app. வழியாக குறுஞ்செய்தியை அனுப்பலாம்.

Friday, 30 January 2015





உதட்டில் முத்தம் காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில் முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம்.
கண்களை திறந்து முத்தம் முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பது போல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷ பட வைப்பதுடன், உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.
கண்களை மூடி கொடுப்பது காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.
கைகளில் முத்தம் கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.
கன்னத்தில் முத்தம் கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.
கழுத்தில் முத்தம் அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
கண்களில் முத்தம் கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நெற்றியில் முத்தம் நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
மூக்கில் முத்தம் மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம். 









காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள். 

ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம்.

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். 

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"

அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Subscribe to RSS Feed Follow me on Twitter!